தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இணையதளம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Published Date: September 27, 2023

CATEGORY: EVENTS & CONFERENCES

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (26.9.2023) தலைமை செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்ப் பரப்புரைக் கழகத் திட்டத்தின் கீழ் தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டய பயிற்சியில் பதிவு செய்வதற்கான இணைய இணைப்பு மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துணைச் செயலாளர் ஜெ. குமரகுருபரன், தமிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண்மை இயக்குனர் டாக்டர் எஸ். அனிஷ்சேகர், தமிழ்நாடு மின்னணு நிறுவன செயல் இயக்குனர் எஸ். அருண்ராஜ், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் பி.சி. நாகசுப்பிரமணி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Media: Murasoli